காதலிக்க வாய்ப்பு தரும் இணையதளம்.



இந்த இணையதளம் எல்லோருக்குமானது அல்ல!இந்த தளாத்தை பயன்படுத்த நீங்கள் இளைஞ‌ராக  இருக்க வேண்டும்.அல்லது மனதளவில் இளமை மிக்கவராக இருக்க வேண்டும்.அல்லது காதலிக்க தயாராக இருக்க வேண்டும்.
இன்னும் சரியாக சொல்வதாயின் காதலியை/(காதலனை) தவறவிட்டு தேடிக்கொண்டிருக்க வேண்டும்.காரணம் இந்த தளத்தின் நோக்கமே பிரிய நேர்ந்த காதலர்கள் பரஸ்பரம் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்து கொடுப்பது தான்.பிரிய நேர்ந்த காதலர்கள் என்றால் ஒரு முறை பார்த்து மறுமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காத துரதிர்ஷ்டசாலிகள் என்று பொருள்.

கண்டதும் காதல்,காணமலே காதல் என்று காதலில் பல வகை இருப்பது போல கண்டதும் காதல் கொண்டு அதை உணராமல் போய் பின்னர் தவிக்கும் ரகமும் இருக்கிற‌து.

பஸ்சிலோ ,ரெயிலிலோ வேறு ஏதேனும் பொது இடத்தில் வேலைக்கு அவசரமாக சென்று கொண்டிருக்கும் போது தேவதை போல ஒரு அழகியை பார்த்து லயிக்க நேரலாம்.ஏன் திரையரங்கிலோ,மாநாட்டிலோ மனதை மயக்ககூடிய ஒரு யவதியை காணலாம்.பார்ப்போம் பேசிக்கொண்டிருப்போம்,ஆனால் தொடர்பு முகவரியை கூட கேட்க சந்தர்ப்பம் இருக்காது.

பின்னர் வீட்டிற்கு வந்த பின் அந்த தேவதையின் தோற்றம் அப்படியே நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும்.கண்ணை மூடினால் கூட அவள் உருவமே வந்து நிற்கும்.அப்படியே மனது படபடக்கும் அலைபாயும்.ஆனால் தொடர்பு கொள்ள வழி இல்லாமல் ஏங்கும்.

உள்ளூரில் வெளியூரில் வெளிநாட்டில் எங்கு வேண்டுமானாலும் இந்த‌ அனுபவம் ஏற்படலாம்.

பொதுவாக‌ ஆண்கள் இந்த அவதிக்கு உள்ளாவது உண்டென்றாலும் பெண்களுக்கும் இத்தகைய அனுபவம் ஏற்படலாம்.

இப்படி ஒரு முறை பார்த்து உள்ளத்தில் பதிந்து போன‌வர்களை மறுமுறை சந்திக்க முடியாதா என ஏங்கி கொண்டிருப்பவர்களை ஒரு கணம் நினைத்து பாருங்கள்.அவர்களின் நிலை பரிதாபகரமானது தான்.உள்ளம் கவர்ந்தவளை மீண்டும் பார்க்க முடியுமா என்பது தெரியாமலேயே பரிதவித்து கொன்டிருக்க வேண்டியது தான்.

இப்படி பஸ் ஸ்டான்டில் பார்த்த பெண்ணை காதலோடு தேடி திரிந்து அலைந்து கடைசியில் கண்டுபிடித்து விடுவது தமிழ் சினிமாவில் வேண்டுமானாலும் சாத்தியம் ,நிஜ வாழ்க்கையில்?

காலம் அதிர்ஷ்ட கதவை திறந்து விட்டால் லட்சத்தில் ஒருவருக்கு முதல் முறை பார்த்தவரை இரண்டாம் முறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.இந்த இரண்டாம் முறை வாய்ப்பை தவறவிட்ட எல்லோருக்குமே ஏற்படுத்தி தரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது 1மிஸ்டு1 இணையதளம்.

தவறவிட்ட அன்புள்ளத்தை மீண்டும் தேடி கண்டுபிடிக்க கை கொடுக்கிறது இந்த தளம்.

எப்படி என்றால் ,எங்கோ ஒருவளை பார்த்தவ‌ர்கள் பின்னர் பார்க்க வாய்ப்பில்லாமல் போன அந்த நபர் பற்றிய விவரத்தை இந்த தள‌த்தில் தெரிவிக்கலாம்.எந்த நாட்டில் எந்த இடத்தில் எப்போது பார்த்தோம் என்பதை தெரிவித்து அப்போது அணிந்திருந்த உடை போன்ற‌வற்றையும் குறிப்பிடலாம்.சந்தித்து பேசியிருந்தால் அது தொடர்பான விவர‌த்தையும் குறிப்பிடலாம்.வாய்ப்பிருந்தால் தங்கள் புகைப்படத்தியும் இணைக்கலாம்.

அதன் பிறகு எப்போதாவது அந்த நபர் இந்த‌ தளத்திற்கு விஜயம் செய்தால் இந்த விவரத்தை பார்த்து நெகிழ்ந்து போய் தொடர்பு கொள்ளும் வாய்ப்புள்ளது.

இந்டஹ் நம்பிக்கையில் தான் ,நியூயார்க்கின் மான்ஹட்டன் பகுதியில் புத்தக கடையில் இருந்து வெளியே வரும் போது உன்னைப்பார்த்தேன்,உனக்கு நீண்ட அழகான கூந்தல்,நாம் இருவருமே பயண வழிகாட்டியை தேடிக்கொண்டிருந்தோம்,உன்னை மீண்டும் பார்க்க துடித்து கொண்டிருக்கிறேன் என்று அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது காதலியை தேடிக்கொண்டிருக்கிறார்.

இதே போல மேலும் பலர் இந்த தளத்தில் தங்கள் என்றோ சந்தித்த தேவதைகளை தேடி கொண்டிருக்கின்ற‌னர்.

யாரேனும் நம்மை இப்படி தேடிக்கொண்டிருக்க கூடும் என்று நம்புகிற‌வர்களும் இந்த‌ தளத்தில் தாங்கள் தேடப்படுகிறோமா என தேடிப்பார்க்கலாம்.

ஒரு முறை சந்திதவர்கள் மீண்டும் சந்திக்க விரும்பினால் அந்த ஆசை நிறைவேறாமால் போககூடாதுஎன்பதை உறுதி செய்வதே இந்த தளத்தின் நோக்கமாக உள்ளது.

இந்த தளத்தின் நிறுவனர்களான சைமன் கான் ம‌ற்றும் யோனு சோ தம்பதி சிறுவயதில் ஒன்றாக படித்து பின்னர் பிரிந்துவிட்டனராம்.அதன் பிற‌கு தற்செயலாக பல ஆண்டுகள்கழித்து சந்தித்த போது த‌ங்கலுக்குள் இருந்த காதலை உணர்ந்து கொண்டனராம்.இந்த இனிய அனுபவத்தால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வதற்கான இணைப்பு பாலமாக இந்த தளத்தை அமைத்துள்ள‌னர்.

இதெல்லாம் நடைமுறை சாத்தியாமா என்று கேட்கலாம்.எல்லாமே இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் காலாத்தில் என்றோ எங்கோ பார்த்து மனதை பறிகொடுத்தர் பற்றிய தகவலையும் இணையத்தில் வெளியிட்டு தேடுவது இயல்பானது தானே.

நிறக் இந்த தளத்தின் மூலமான தேடல் பலனளிக்க ஒரு யுக்தி இருக்கிற‌து.அதை இந்த தளம் ஒரு விரலால் கண்ணை துடைத்து சைகை செய்வது என்று குறிப்பிடுகிற‌து.எப்போதாவது பொது இடத்தில் பார்க்கும் யாரையேனும் மீண்டும் சந்திக்க வேன்டும் என்று விரும்பினால் அவரை பார்த்து ஒரு கையால் க‌ண்ணை துடைத்து கொண்டால் என்னை பற்றி 1மிஸ்டு 1 தளத்தில் குரிப்ப்டுஙக்ள் என்று சொல்வதாக அர்த்தமாம்.எப்படி?

இணையதள‌ முகவரி

Comments

  1. தகவலுக்கு நன்றி... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

Post