இசையுலகில் புதிய புரட்சி: அச்சிடப்பட்ட பாடல் குறிப்புக்களை கணனியில் இயக்கலாம்
கணனியில் பாடல்களை எடிட்டிங் செய்வதற்கென, இதுவரை காலமும் அவற்றிற்கென தனியான மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
எனினும் அவற்றின் உதவியுடன் பாடல்களை எடிட் செய்வதற்கு இலக்க முறையில்(digital) கணனியில் சேமிக்கப்பட்ட ஒலிவடிவ கோப்புக்களை மட்டுமே பயன்படுத்த முடிந்தது.
ஆனால் தற்போது தாள்களில் அச்சிடப்பட்ட பாடல் குறிப்புக்களை வாசித்து, அதே நேரத்தில் கணனியில் இசைக்கக்கூடிய(play) முறைமை ஒன்றினை ஜப்பான் மெற்றோபொலிற்றன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணனி வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இச்செயற்பாட்டிற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒளியியல் வாசிப்பான்(optical reader) ஒன்று பயன்படுத்தப்படுகின்றது.
இச்சாதனத்தின் மூலம் கையால் எழுதப்பட்ட ஒலிக் குறிப்புக்களையும் வாசித்து இசைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments