பேஸ்புக் நிறுவனம் போலி கணக்காளரின் பட்டியலை வெளியிட்டுள்ளது
பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில், மாதந்தோறும் இதனை 95 கோடியே 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 8.7% பேர் போலியானவர்கள் அல்லது பொய்யான அக்கவுண்ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சம் ஆகும்.
இந்த பொய்யான அக்கவுண்ட்கள் மூன்று வகைப்படும். முதலாவதாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருத்தல். ஒரு சிலர் தங்களின் வசதிக்காகவும், என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தங்களுக்கு ஒரே பெயரிலும், அல்லது வேறு வேறு பெயரிலும் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர்.
இது பேஸ்புக் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முரணானதாகும். நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இது போல ஒருவரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினைத் தடுக்க முடியவில்லை என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
அடுத்து 2.4% அக்கவுண்ட்கள் எந்த வகை என பகுத்தறிய முடியாதவையாக உள்ளது. சிலர் தங்கள் நிறுவனத்திற்காக என தனி மனித அக்கவுண்ட்களை உருவாக்கி இயக்குகின்றனர்.
சிலர் தங்கள் செல்லப் பிராணிகளுக்காகத் தங்கள் பெயரில் அல்லது கற்பனைப் பெயரில் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர். இவற்றை எந்த வகையில் பகுத்து வைப்பது என்பதனை எளிதில் முடிவு செய்திட முடிவதில்லை.
அடுத்ததாக, விரும்பத்தகாத அக்கவுண்ட்கள் 1.5% உள்ளன. இவை பேஸ்புக் நிறுவனம் விரும்பாத, தடை செய்திடும் பணிகளுக்கெனவே பொய்யான அக்கவுண்ட்களாக உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஸ்பேம் மெயில்களை அனுப்புவதற்காக சில அக்கவுண்ட்கள் இயங்குகின்றன.
Comments