பில்கேட்சின் microsoft நிறுவனம் நேற்று புதிய லோகோ அறிமுகம் செய்தது.
பில்கேட்சின் மைக்ரோசொப்ட் நிறுவனம் நேற்று புதிய லோகோ அறிமுகம் செய்தது.
இதற்கு முன் பறக்கும் கொடி போல நான்கு நிறங்களின் தனித்தனி சதுரங்கள் மைக்ரோசாப்ட் நிறுவன லோகோவாக இருந்தது.
இப்போது சிவப்பு, பச்சை, நீலம், பழுப்பு ஆகிய நான்கு கட்டங்கள் ஒரே அளவுடன் இருப்பது போல எளிமையாக லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 37 ஆண்டுகள் ஆகின்றன. அப்போது முதல் 5வதாக வெளியிடப்படும் புதிய லோகோ இது.
எனினும் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் புதிய லோகோ அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மென்பொருள் கண்டுபிடிப்புகளில் புதிய அத்தியாயத்துக்குள் நுழைவதை குறிக்கும் வகையிலும், நவீன வர்த்தக உலகில் எளிமையாக அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்று மைக்ரோசொப்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments