மைக்ரோமக்ஸின் புதிய வெளியீடு Canvas A100



கைப்பேசி உற்பத்தியில் ஏனைய நிறுவனங்களுக்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் மைக்ரோமக்ஸ் நிறுவனமானது தனது நவீன தயாரிப்பில் உருவான Canvas A100 எனும் டுவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கின்றது.

கூகுளின் அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசிகள் 5 அங்கு அளவு கொண்டதும், 854 x 480 ரெசொலூசன் உடையதுமான LCD தொடுதிரையைக் கொண்டுள்ளன.
மேலும் 5 மெகாபிச்சல்கள் கொண்ட அதிவினைத்திறன் உடைய கமெரா, 1GHz வேகம்கொண்ட புரோசசர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசிகளின் பிரதான நினைவகமான RAM இனை 4GB வரை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Post