facebook பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படு​த்த புதிய பொறிமுறை




சமூக இணையத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளமானது தனது பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை பாதுகாப்பதற்கென புதிய பொறிமுறை ஒன்றினைக் கையாண்டுள்ளது.
அதாவது பயனர்கள் நேரடியாக பேஸ்புக் இணையத்தள நிபுணர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக மின்னஞ்சல் முகவரி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கணக்குகள் திருடப்பட்டாலோ அல்லது கடவுச்சொற்கள், வியாபாரங்கள் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டாலோ, இம்மின்னஞ்சல் முகவரி மூலமும் நிபுணர்களைத் தொடர்பு கொண்டு இழந்த கணக்குகள், கடவுச்சொற்கள், தனிப்பட்ட, வியாபாரம் தொடர்பான தகவல்கள் என்பவற்றை மீட்டெடுக்க முடியும்.
குறித்த மின்னஞ்சல் முகவரி phish@fb.com என்பதாகும்.

Comments

  1. மிகவும் தேவைப்படும் பதிவு...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…


    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    ReplyDelete

Post