பாடல்களை பகிர ஒரு இணையதளம்.






சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது.
அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் ஷேர் இணையதளம்.நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் சுலபமாக பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது.
பாடல்களை பகிர்வது மிகவும் எளிதானதே.பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மூலம் இந்த தளத்தி நுழைய வேண்டும்.அதன் பிறகு தளத்தில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ள பாடல்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அல்லது பிடித்தமான பாடலை தேடிப்பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு அந்த பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் அந்த பாடலை பகிர்ந்து கொள்ளலாம்.பாடலை பகிர்ந்து கொள்வதற்கான காரணத்தை சிறு குறிப்பாகவும் இணைக்கலாம்.நண்பர்களும் பாடல்களை கேட்டு விட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.பாடலுக்கு வாக்களிக்கலாம்.
இணையதள முகவரி;songshare

Comments

  1. எனக்கு மிகவும் தேவைப்படும்... நன்றி…

    ReplyDelete

Post