கைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை


இன்றைய காலத்தில் கைபேசி இல்லாதோர் முன்னேற வழி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நம்முடைய வாழ்வில் வர்த்தக ரீதியில் கைபேசிகள் முழு அங்கமாகி விட்டன.
இந்த பயன்பாட்டினால் நமக்கு நன்மை என்றாலும், நம்மை அறியாமலே நமக்கு பெரும் துன்பத்தினை ஏற்படுத்துகிறது என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர்.

இதுவும் இன்றைய இளைய தலைமுறையினர் சக நேரமும் ஏன் தூங்கும் போதுகூட நெஞ்சிலே வைத்து தூங்குபவர்களும் உண்டு. குறிப்பாக காதலன்- காதலி உரையாடல் என்றால் அது விடிய, விடிய போய்ச்சேரும்.
இவ்வாறு நம்மை ஆட்டுவிக்கும் கைபேசிகளால் ஏற்படும் தீமை குறித்த எச்சரிக்கை செய்தி
1. கைபேசியை உபயோகப்படுத்தாத நேரத்தில், அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது.
2. பேசும் போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசிக் கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும்.
3. நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ் பகிர்ந்து கொள்ளவும்.
4. நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது.
5. குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம் கெடுதலில் இருந்து தப்பிக்கலாம்.
6. போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது.

Comments

  1. useful post friend

  2. நல்லதொரு விழிப்புணர்வு தகவல்கள்... ஊரில் இதனால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் சொல்லி கூட சில பேர் அறிவதில்லை.... ...ம்...

Emotions
Copy and paste emojis inside comment box

Post

Menu