Windows 7 இயங்குதளத்தில் நினைவில் கொள்ள வேண்டியவைகள்



இதுவரை விண்டோஸ் இயங்குதளங்களில் இல்லாத சில புதிய வசதிகளை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவில் கொள்வோம்.
1. பின் அப் போல்டர்: நீங்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து பைல்களை எடுத்து பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் குறிப்பிட்ட பைல்கள் உங்கள் செயல்பாட்டிற்குத் தேவையா? போல்டரையும் அதில் உள்ள பைல்களையும் பெற விண்டோஸ் எக்ஸ்புளோரர் எல்லாம் சென்று திறக்க வேண்டியதில்லை.
குறிப்பிட்ட போல்டரை, டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, இழுத்து வந்து டாஸ்க் பாரில் விட்டுவிடவும். விண்டோஸ் 7 தானாக அதனை எக்ஸ்புளோரர் ஜம்ப் லிஸ்ட்டில் வைத்துக் கொள்ளும். போல்டரைத் திறக்க டாஸ்க் பாரில் உள்ள அதன் ஐகானில் கிளிக் செய்திடலாம்.
2. டபுள் விண்டோஸ்: புரோகிராம் ஒன்றைத் திறந்து இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரங்களில் அதே புரோகிராமின் இன்னொரு வகைச் செயல்பாட்டினை மேற்கொள்ள விரும்பி, அதனையே இன்னொரு இயக்க விண்டோவில் திறக்க ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகானில் கிளிக் செய்திடவும். மவுஸின் நடு பட்டனை அழுத்தியும் இதே செயல்பாட்டினைக் கொண்டு வரலாம்.
3. டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்ற: மொனிட்டரின் காட்சித் தோற்றத்தினைச் சரி செய்து, அதில் காட்டப்படும் படங்கள் மற்றும் டெக்ஸ்ட் துல்லிதமாகத் தெரிய மானிட்டரை அட்ஜஸ்ட் செய்திடாமல் நேரடியாக சில பைல்களை இயக்கி சரி செய்திட விண்டோஸ் 7 உதவுகிறது. இதற்கென இரண்டு ஆப்லெட் புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.
இவை Clear Type Text Tuning மற்றும் Display Color Calibration. இவற்றை செயல்பாட்டிற்குக் கொண்டு வர, ரன் கட்டத்தில் cttune.exe மற்றும் dccw.exe எனக் கொடுத்து இயக்கவும்.
4. ஐகான்களை வரிசைப்படுத்த: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகான்களை நாம் விரும்பும் வகையில் வரிசைப்படுத்தி அமைக்கலாம். ஐகான் மீது ரைட் கிளிக் செய்து இழுத்து வந்து விரும்பும் இடத்தில் விட்டுவிடலாம்.
முதல் ஐந்து ஐகான்களின் புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீயுடன், அது அமைந்துள்ள வரிசை எண்ணை 1,2,3 என அழுத்தினால் போதும்.
எடுத்துக்காட்டாக வேர்ட் புரோகிராம் ஐகான் முதலாவதாக இருந்தால், விண்டோஸ் கீயுடன் 1 என்ற எண் கீ அழுத்தினால் வேர்ட் புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.
5. டாஸ்க் பார் மெனு: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களை முழுமையாகப் பார்த்து செயல்பட, விண்டோஸ் கீயுடன் கூ கீயை அழுத்தவும்.
திரையில் டாஸ்க்பார் மெனு காட்டப்பட்டு அதில் உள்ள புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் நமக்குத் தேவையான புரோகிராமினை ஆரோ கீ மூலம் தேர்ந்தெடுத்து, என்டர் அல்லது கிளிக் செய்வதன் மூலம் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இந்த திரைக் காட்சியிலிருந்து வெளியேற எஸ்கேப் கீயை அழுத்தவும்.
6. விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்: சிறு சிறு விஷயங்களை நாம் அடிக்கடி மறந்துவிடுவோம். எனவே தான் சிறிய தாள்களில் அவற்றைக் குறித்து வைப்போம். குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டியதை நம் நாட் குறிப்பு, மாத காலண்டர்களில் சிறியதாகக் கிறுக்கி வைப்போம்.
ஆனால் பல வேளைகளில் இந்த நினைவுபடுத்த வேண்டிய குறிப்பு, கிறுக்கலாக அமைத்ததால் என்னவென்று தெரியாது. அல்லது எங்கே குறித்து வைத்தோம் என்பது நினைவிற்கு வராது.
நாம் அன்றாடம் பல மணி நேரம் பயன்படுத்தும் கணனி மொனிட்டர் திரையில் இவை இருந்தால் எவ்வளவு வசதி. விண்டோஸ் 7 சிஸ்டம் திரையில் இதற்கான வசதி Sticky Notes என்ற பெயரில் தரப்பட்டுள்ளது.
ஏழு வண்ணங்களில் இந்த ஸ்டிக்கி நோட்ஸ் அமைத்துக் கொள்ளலாம். இதனால் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை வகைப்படுத்தி அமைத்துக் கொள்ளலாம்.
இந்த ஸ்டிக்கி நோட் வண்ணக் கட்டத்தில் சென்று, ரைட் கிளிக் செய்தால், வண்ணத்தையும் மாற்றி அமைக்கலாம்.
இன்னொரு நோட் பிட் தேவை எனில், இதே நோட் பிட்டில் இடது மேலாக உள்ள + அடையாளத்தின் மீது கிளிக் செய்தால் பெறலாம். ஸ்டிக்கி நோட்ஸ் பெற தேடல் கட்டத்தில், StikyNot.exe என டைப் செய்து என்டர் தட்டவும். அல்லது Start >All Programs > Accessories >Sticky Notes எனச் சென்று பெறவும்.

Comments

  1. நல்ல பயன்னுள்ள பதிவு..... உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள தகவல்..உங்கள் பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி

    ReplyDelete

Post