கூகுளை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக்



சர்வதேச அளவில் வலைத்தளங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் அலெக்ஸா நிறுவனத்தின் பட்டியலில், கூகுளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது பேஸ்புக்.
கணனி யுகத்தின் ஜாம்பவனான கூகுள் நிறுவனம் தான் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தது.
தற்போது முதன் முறையாக கூகுளை பின்னுக்கு தள்ளி விட்டு, முதலிடத்தை பிடித்துள்ளது பேஸ்புக்.

இது திகைக்க வைக்கும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு தகவலை தேட வேண்டும் என்றாலும், கூகுளை திறக்காமல் சாத்தியம் இல்லை என்று ஒரு நிலை இருப்பதனால் கூகுள் தரவரிசை பட்டியலில் முதலில் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
ஆனால் சில காலங்களாக அனைவரின் மனதையும் இரவு பகலாக ஆக்கிரமித்து வரும் பேஸ்புக் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.
லட்சக்கணக்கான மக்களால் தினம் தினம் ஆயிரக்கணக்கான் வலைத்தங்கள் இணையத்தில் தேடப்பட்டு வருகிறது. இவற்றில் எந்த வலைத்தளம் அதிகமான பேரால் தேடப்படுகிறது என்பது பற்றிய தரவரிசை பட்டியலை பிரித்து காட்டும் நிறுவனம் அலெக்ஸா.
இந்த அலெக்ஸா டூல்பாரை ஒருமுறை உங்களது சிஸ்டத்தில் பயன்படுத்தி விட்டால் போதும், அதன் பிறகு எந்த வலைத்தளத்தை திறந்தாலும் அதன் தரவரிசை பட்டியல் தெளிவாக காட்டப்படும்.
இதில் முதல் 10 இடத்தில் இருக்கும் வலைத்தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம். முதலிடத்தில் பேஸ்புக், இரண்டாவது இடத்தில் கூகுள், மூன்றாவது இடத்தில் யூடியூப், நான்காவது யாஹூ மற்றும் ஐந்தாவது இடத்தில் பெய்டூ.காம்
இதை தொடர்ந்து ஆறாவது இடத்தில் விக்கிப்பீடியா, ஏழாமிடத்தில் விண்டோஸ் லைவ் இருக்கிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர் எட்டாமிடத்தில் உள்ளது. கியூகியூ.காம் ஒன்பதாம் இடத்திலும் மற்றும் அமேசான்.காம் பத்தாமிடத்திலும் உள்ளன.

Comments

  1. அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

  2. உங்கள் தகவலுக்கு நன்றி......


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  3. tthanks brother

Emotions
Copy and paste emojis inside comment box

Post