நமது புகைப்படங்களில் Slide Show உருவாக்குவதற்கு மென்பொருள்.


நமது புகைப்படங்களில் வித விதமான Video Effects கொண்டுவர பலவிதமான மென்பொருட்கள் உள்ளன.
ஆனால் சிறிய அளவில் நிறைவான பலன்களை தரக்கூடியதாக இந்த மென்பொருள் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஓபன் ஆகும் விண்டோவில், வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும்.
அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை தெரிவு செய்யவும். அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை தெரிவு செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல் வேண்டுமோ அதனை தெரிவு செய்யுங்கள்.
இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மொத்தம் ஆறு டேப்புகள் உள்ளன. புகைப்படத்திற்கு பெயர் கொண்டு வருவதில் இருந்து தேவையான எபெக்ட்களை நாம் எடுத்து வரலாம். Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்.
அனைத்தையும் செய்து முடித்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் உள்ளது.

Related Posts

Comments

  1. இதைத்தாங்க தேடிக் கொண்டிருந்தேன்... மிக்க நன்றி...

  2. பகிர்ந்த நண்பனுக்கு நன்றி

Emotions
Copy and paste emojis inside comment box

Post