கணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு.

கணினி வரலாறு மற்றும் கணினி அரிய புகைப்படங்களின் தொகுப்பு.

== கணினி வரலாறு ==

படிமம்:Colossus.jpg

ஆதியில் ''"கணிப்பான்"'' என்பது [[கணிதர்]] ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக [[எண்சட்டம்]] போன்ற பல்வேறு [[பொறிமுறை கணிப்பு சாதனம்|பொறிமுறை கணிப்பு சாதனங்களின்]] உதவியுடன் பணிபுரிந்தார். தொடக்ககால கணிப்பு சாதனத்துக்கு உதாரணமாக கி.மு 87 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் [[அன்டிகைதிரா]] எனும் கிரகங்களின் அசைவுகளை கணிப்பதற்கு பயன்பட்ட கிரேக்க சாதனத்தை குறிப்பிடலாம். இந்த நூதனமான சாதனத்தின் அமைவுக்கு காரணமான தொழில்நுட்பம் ஏதொவொரு காலகட்டத்தில் தொலைந்து போனது.


ஐரோப்பாவில் ஏற்பட்ட [[மறுமலர்ச்சி]] காரணமாக [[கணிதம்]], [[பொறியியல்]] துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. 17 ஆம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் [[மணிக்கூடு|மணிக்கூடுகளுக்காக]] அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல [[பொறிமுறை கணிப்பு சாதனம்|பொறிமுறை கணிப்பு சாதனங்கள்]] பின்னடையாக வரத் தொடங்கின, இதன் காரணமாக இலக்கமுறை கணினிகளுக்கு மூலமான தொழில்நுட்பங்கள் பல 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அபிவிருத்தி செய்யப்பட்டன. உதாரணமாக [[துளைப்பட்டை]], [[வெற்றிட கட்டுளம்]] என்பவற்றை குறிப்பிடலாம். முதல் முழுமையான செய்நிரல் கணினியை [[1837]] ஆம் ஆண்டில் [[சார்ல்ஸ் பாபேஜ்]] என்பவர் எண்ணக்கருப்படுத்தி வடிவமைத்தார். ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, நிதி பற்றாக்குறை, மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் பல விஞ்ஞான கணிப்பு தேவைகளுக்கு, கூடிய மடங்கடி கொண்ட விசேடபயன் [[ஒத்திசை கணினி|ஒத்திசை கணினிகள்]] பயன்படுத்தப்பட்டன. பிரசினைகளின் நேரடி பௌதிக அல்லது இலத்திரனியல் மாதிரியுருவை அவை கணிப்புக்களுக்கு பயன்படுத்தின. இத்தகைய கணினிகள் [[இலக்கமுறை]] கணினிகளின் அபிவிருத்திக்கு பின்னர் மிகமிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

[[படிமம்:Colossus.jpg|thumb|இரண்டாம் உலக போரின் போது சேர்மானிய சங்கேத குறிப்புகளை கண்டறிய கொலோசஸ் கணினி பயன்பட்டது.]]

வரவர திறனும், நெகிழ்வுதன்மையும் கூடிய கணிப்பு சாதனங்கள் [[1930]], [[1940]] ஆம் ஆண்டுகளில் பின்னடையாக உருவாக்கப்படலாகின. இவை நவீன கணினிகளின் மேன்மையான [[பண்புக்கூறு|பண்புக்கூறுகளை]] படிப்படியாக சேர்த்துக் கொண்டன, உதாரணமாக [[இலக்கமுறை இலத்திரனியல்]] உபயோகம் ([[கௌவுட் சனொன்]] என்பவரால் [[1937]] ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது), கூடுதல் நெகிழ்வுதன்மை வாய்ந்த செய்நிரலாக்கம். ஒரு குறிப்பிட்ட புள்ளியை இந்தக் காலக்கோட்டில் முதலாவது கணினி என்று வரையறுப்பது மிகவும் கடினமானது. குறிப்பிடதக்க சாதனைகளாக [[கொன்ராட் ஃசுஸ்]] என்பாரின் [[ஃசட் எந்திரம்]], ஆங்கிலேயரின் இரகசிய [[கொலோசஸ் கணினி]], அமெரிக்க [[என்னியாக்]] என்பவை அமைந்தன.

என்னியாக்கின் குறைகளை தெரிந்து கொண்ட அதன் அபிவிருத்தியாளர்கள், அதைவிட நெகிழ்வுதன்மை கூடியதும், இலட்சணமானதுமான வடிவமைப்பை உருவாக்கினார்கள். பின்னாளில் [[செய்நிரல் தேக்க கட்டமைப்பு]] என அறியப்படும் இதிலிருந்தே அனைத்து நவீன கணினிகளும் பெறப்படுகின்றன. இந்த கட்டமைப்பிலிருந்தே கணினிகளை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் பல [[1940]] ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன, இதில் முதலில் செயற்பட தொடங்கியது [[மான்செஸ்டர்-சிறிய-அளவிடை-பரீட்சார்த்த எந்திரம்]] ஆகும். ஆனால் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய முதலாவது கணினி [[எட்சாக்]] ஆகும்.

கட்டுளத்தால் இயக்கப்பட்ட கணினிகளே [[1950]] ஆம் ஆண்டுகள் முழுவதிலும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் [[1954]] ஆம் ஆண்டு [[திரிதடையம்|திரிதடையங்கள்]] கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக [[1960]] ஆம் ஆண்டுகளில், கட்டுள கணினிகள் செலவு குறைந்த, சிறிய, வேகமான திரிதடையக் கணினிகளால் மாற்றீடு செய்யப்படலாயின. [[ஒருங்கிணைந்த-சுற்றமைப்பு]] தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் [[1970]] ஆம் ஆண்டுகளில் கணினி [[உற்பத்திச் செலவு]] வெகுவாகக் குறைந்து சென்றது, இதனால் தற்போதைய [[தனியாள் கணினி|தனியாள் கணினிகளின்]] முன்தோன்றல்களை வாங்கும் திறன் சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டது.











The original IBM Personal Computer (PC)

































பதிவு உபயோகமானதாக இருந்தால் கீழே கமெண்ட் போடவும்.  நன்றி

Comments

  1. பல தகவல்கள் வியக்க வைக்கின்றன... படங்கள் இணைத்தது சிறப்பு... நன்றி...

  2. மிக நல்ல பயனுள்ள தகவல் உங்கள் பகிர்வுக்கு மிக நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  3. Payanulla pathivu.. Mikka nanri..

Emotions
Copy and paste emojis inside comment box

Post