தேவையில்லாத பேஸ்புக் Group இருந்து விலகுவது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி ஆகும். இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம். இது போன்று பலரும் பல குரூப்பில் சேர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் நாளடைவில் நீங்கள் பேஸ்புக் இந்த குரூப்பில் அப்டேட்களை விரும்பாவிட்டாலும் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலகாதவரை அந்த குழுமத்தின் அப்டேட்ஸ் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோம் இந்த பிரச்சினையை நீக்க அந்த வேண்டாத பேஸ்புக் குழுமத்தில் இருந்து விலகுவது எப்படி என பார்க்கலாம்.


  • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்களுக்கு வேண்டாத பேஸ்புக் குரூப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதில் வலது பக்கத்தில் Settings பட்டனை அழுத்தினால் ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள Leave Group என்பதை அழுத்தவும்.




அடுத்து வரும் விண்டோவில் Leave Group என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலக்கப்படுவீர்கள். இனி அந்த குழுமத்தின் எந்த அப்டேட்ஸ்ம் உங்களுக்கு வராது.



இனி அந்த குழுமத்தில் இருப்பவர்கள் உங்களை உறுப்பினராக சேர்க்க முடியாது. ஆனால் நீங்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த குழுமத்தில் மறுபடியும் சேர்ந்து கொள்ளலாம்.


Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post