கூகுள் குரோமில் ஒன்றிற்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளில் உள்நுளைவதற்​கு







பொதுவாக ஒரே உலாவியலில் வெவ்வேறுபட்ட கணக்குகளைப் பயன்படுத்தி குறித்த ஒரு இணையத்தளத்தினுள் லாக்கின் ஆவது முடியாத காரியம் ஆகும். இதற்கு முதலில் லாக்கின் செய்யப்பட்ட கணக்கின் குக்கீஸ், பின்பு லாக்கின் செய்யப்படும் குக்கீஸ் என்பனவற்றிற்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளே காரணம் ஆகும். 

எனினும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே உலாவியில் திறக்கமுடியும். அதன் அடிப்படையில் கூகுள் குரோம் உலாவியில் ஒன்றிற்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளில் உள்நுளைய பின்வரும் படிமுறைகளைக் கையாளவும்.
முதலில் ஒரு பேஸ்புக் கணக்கினைப் பயன்படுத்தி லாக்கின் செய்யவும். தொடர்ந்து குரோம் உலாவியின் வலது மேல் மூலையில் காணப்படும் சாவி போன்ற உருவத்தின் மீது கிளிக் செய்து New incognito window என்பதை தெரிவு செய்யவும்.

அப்போது பிரத்தியேகமான கூகுள் குரோம் விண்டோ ஒன்று தோன்றும். அதில் புதிதாக Facebook.com என்ற முகவரியை டைப் செய்து புதிய கணக்கு ஒன்றினைப் பயன்படுத்தி லாக்கின் ஆகவும்.
இதேபோன்று ஜி மெயில், யாகூ, காட்மெயில் போன்ற மின்னஞ்சல் சேவைகளிலும், டுவிட்டர் சமூகத்தளத்திலும் பல கணக்குகளைப் பயன்படுத்தி உள்நுளைய முடியும்.



Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post