Asus தயாரிப்பில் வெளியாகும் Padfone 2

Asus தயாரிப்பில் வெளியாகும் Padfone 2


Asus நிறுவனமானது தனது தயாரிப்பில் உருவான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய Padfone 2 கைப்பேசிகளின் வெளியீடு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் 16ம் திகதி அறிமுகப்படுத்தப்படவிருக்கும் Padfone 2 கைப்பேசிகள் 4.7 அங்குல அளவு கொண்ட தொடுதிரைவசதியினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திரையின் Resolution-ஆனது 1280 x 720 Pixels-களாகக் காணப்படுகின்றது.
மேலும் 13 Megapixels உடைய அதிதுல்லியம் வாய்ந்த கமெராவினையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசியின் Processor-ஆனது Qualcomm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதும் 1.5GHz வேகத்தை உடையதுமான Quad-core Processor ஆகும்.
இவை தவிர WiFi, Bluetooth ஆகிய வசதிகளையும் உள்டக்கியுள்ளதுடன் நீடித்து உழைக்கக்கூடியதாகக் 2,140 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது

Comments

Post