VideoFlick வீடியோக்கள், புகைப்படங்கள் Editing செய்ய அருமையான இலவசம் மென்பொருள்


VideoFlick மென்பொருளானது வீடியோக்கள், புகைப்படங்கள் என்பனவற்றை Editing செய்வதற்கு உதவி புரிவதோடு அவற்றினை குடும்பத்தவர்களுடனும், நண்பர்களுடனும் ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளும் வசதியினைத் தருகின்றது.
இதன் மூலம் பல்வேறு Format-களில் வீடியோக்களை மாற்றம் செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் வீடியோக்களிலிருந்து இலகுவாக Snapshot-களினையும் பெறக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வாழ்த்து அட்டைகளையும்(Greeting Cards) தயாரிக்க முடிவதுடன் அவற்றை பிரபல்யமான இணையத்தளங்களில் பகிரும் வசதியையும் தருகின்றது. இவற்றுடன் வீடியோக்களுக்கான Title, Credit போன்றவற்றினையும் சேர்த்துக் கொள்ள முடியும்.
இம்மென்பொருளின் மூலம் வீடியோக் கோப்பு ஒன்றினை ASF, AVI, MP3, AAC, MP2, AC3 ஆகிய Format-டிற்கும் மாற்றம் செய்து கொள்ள முடியும். தேவையேற்படின் அவற்றினை CD மற்றும் DVD களில் பதிவு செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.

Related Posts

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post