Facebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய

Facebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய.


Facebook சமூக இணையத்தில் வழமையாக குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நண்பருடன் மட்டமே சாட் செய்யும் வசதி உள்ளதாக மட்டுமே நம்மில் பலரும்  அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஒரே சமயத்தில் ஆன்லைனில் உள்ள நாம் விரும்பும் பல நண்பர்களை ஒரு குழுவாக சேர்த்து சாட் செய்ய முடியும் என்பது நம்மில் சிலருக்கு தெரியாது. .
Facebook கணக்கில் நுழைந்து கொண்டு, ஆன்லைனில் இருக்கும் விரும்பிய நண்பர் ஒருவரை சாட்டில் க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது திறக்கும் சாட் பெட்டியில் வலது மேற்புறமுள்ள கியரை க்ளிக் செய்து Add Friends to Chat.. என்பதை க்ளிக் செய்யுங்கள். 
கீழே தோன்றும் பெட்டியில் நீங்கள் சாட் குழுவில் இணைக்க விரும்பும் நண்பர்கள் பெயரை ஒவ்வொன்றாக டைப் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 
அவ்வளவுதான் இனி இப்பொழுது உருவாக்கிய குழுவில் உள்ள நண்பர்களிடம் ஒரே சமயத்தில் சாட் செய்திட முடியும்

Comments

  1. தகவலுக்கு மிகவும் நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. நன்றி நண்பரே! அரட்டை அடிப்பவர்களுக்கு அருமையான தகவல்!

    அதாவது, பங்கு பெறும் நபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவராக இருக்க வேண்டிய நிபந்தனை உள்ளது. ஒருவருக்கொருவர் தெரியாத மற்ற நபர்களுடன் ஒரே சமயத்தில், ஒரே விண்டோவில் சாட் செய்ய முடியுமா என்பது என் கேள்வி! முடியாது என நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால் கூறவும்!

    ReplyDelete
  3. என் கேள்விக்கு பதிலை, சினம் கொள்ளாமல் கூறவும்!

    ReplyDelete
  4. மரணத்தின் வாயிலை நோக்கி...உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  5. மரணத்தின் வாயிலை நோக்கி: ஒரேசமயத்தில் இல் நமக்கு டெரியாட பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய முடியும் .. நமக்கு தெரியதவர்கள் தன் facebook- இல் நீரிய இருப்பார்கள் ..
    நன்றி,

    ReplyDelete
  6. எப்படி? புரியவில்லையே! கொஞ்சம் விவரமாகக் கூறவும்!

    ReplyDelete
  7. தோழரே, இப்பொழுது தான் புரிகிறது உங்களின் பதில். தெரிந்தவர்களுடன் ஒரே விண்டோ'வில் உரையாடும் போது, தெரியாதவர்களுடன் ஏன் முடியாதா? முடியும். அது எனக்குத் தெரியும். ஆனால், ஒருவருடன் சாட் செய்வதை மற்றவர்கள் பார்க்கக் கூடுமே! நான் கேட்பது அதுவல்ல. தெரியாத பல நபர்களுடன் உரையாடும் போது, ஒருவருக்கு நாம் அனுப்பும் தகவல்கள், இன்னொருவர் பார்க்காமல் இருக்கும் வண்ணம், பல விண்டோ'க்களைத் திறவாமல், ஒரே விண்டோ'வில் சாட் செய்ய முடியுமா? என்பது தான் என் கேள்வி! இதைத் தான் "முடியாது என நினைக்கிறேன்" என்று கூறினேன்.

    ReplyDelete
  8. மரணத்தின் வாயிலை நோக்கி! normal chat செய்கள் மற்றவர்கள் பார்க்கக் முடியாது .. நன்றி

    >>>>என வச்சி காமெடி யாதும் பணலய >>>>

    ReplyDelete
  9. திண்டுக்கல் தனபாலன் sir தங்களின் கருத்துக்கும் நன்றி........

    ReplyDelete

Post