சச்சின் டெண்டுல்கரின்(Sachin Tendulkar )வாழ்க்கை வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.




சச்சின் டெண்டுல்கரின்(Sachin Tendulkar )வாழ்க்கை வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar  பிறப்பு ஏப்ரல் 24, 1973) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர். தனது 16ஆவது வயதில் பாக்கித்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலகத்துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்
. தேர்வுப் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே;
வரையறுக்கப்பட்ட பந்துப் பரிமாற்ற அனைத்துலகப் போட்டிகளில் (LOI) முதலாவது இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். அனைத்துலகப் போட்டிகளில் மொத்தமாக நூறு நூறுகளை எட்டிய முதலாமவரும் இவரே.
இது வரை துடுப்பாட்டம் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் தேர்வுப் போட்டிகளில் பிராட்மனுக்குஅடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.[இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூசண் விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு


சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் அவரால் ஓர் அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாகத் தொடர்ந்து ஆடி வரும் இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார்.
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

துடுப்பாட்ட வாழ்க்கை


  • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் (ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.
  • 1994 செப்டம்பர் ஒன்பதாந்திகதி ஒரு நாள் அனைத்துலகப் போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
  • 1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் இரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சச்சின் அரையிறுதியில் 65 ஓட்டங்களை குவித்தார்.
  • 1998இல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய தேர்வுத் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார். அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோக்கோ-கோலா முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்துக் கோப்பையை தனி ஒருவராக[சான்று தேவை] பெற்றுத் தந்தார்.
  • 1999இல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகித்தானுக்கு எதிரான தேர்வுப் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு சச்சின் 136 ஓட்டங்களைக் குவித்தார். அப்போட்டியில் கடைசி நான்கு இலக்குகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.
  • 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் சிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியில் பங்கேற்காமல் இந்தியா வர வேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் அணியில் திரும்பிக் கென்யாவிற்கு எதிராக 141 ஓட்டங்களைக் குவித்தார். அந்தச் சதத்தைத் தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.
  • 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறக் காரணமானார். இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  • திசம்பர் 10, 2005 அன்று கவாஸ்கரின் தேர்வுச் சதங்கள் (34) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
  • 2007-2008இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்துத் தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
  • 2008ஆம் ஆண்டு அக்டோபர் 17இல் உலகில் மேற்கு இந்தியத் தீவு ஆட்டக்காரர் இலாராவின் சாதனையை முறியடித்து தேர்வுத் துடுப்பாட்டத்தில் கூடிய ஓட்டங்கள் (12273 ஓட்டங்கள்-நவம்பர் 10, 2008இன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். தேர்வுப் போட்டிகளின் வரலாற்றில் இது வரை மொத்தம் 51 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 248*.
  • ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2012இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியமான தகவல்.
  • 24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறிச் சதங்களைக் கோட்டை விட்டுமிருக்கிறார்.
  • ஒருநாள், தேர்வு ஆட்டங்களில் சச்சின் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134 பிடிகளையும் தேர்வுப் போட்டிகளில் 106 பிடிகளையும் பிடித்துள்ளார். மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.
  • 2011ஆம் ஆண்டு நவம்பர் எட்டாந்திகதி அன்று தேர்வு ஆட்டங்களில் 15000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இத்தனை சாதனைகளின் மத்தியில் சோதனைகள் இல்லாமல் இல்லை.
  • இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
  • 2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தைச் சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு தேர்வுப் போட்டியில் ஆடத் தடை விதித்தார். ஆனால், தொலைக்காட்சியில் சச்சின் பந்தைத் துடைப்பதாக மட்டுமே தெரிய வந்தது. இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் அனைத்துலகத் துடுப்பாட்டக் கழகம் தலையிட்டுத் தடையை நீக்கியது (இந்தியப் பாராளுமன்றம் வரை இந்தச் சிக்கல் விவாதிக்கப்பட்டது.).
  • 2003இல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் அனைத்துலகப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.
  • 2004இல் பாக்கித்தானுடனான தேர்வுத் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் இராகுல் திராவிட் ஆட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டைச் சதம் சாத்தியமில்லாமல் போனது.

விருதுகள்

1994 அர்ஜூனா விருது.
1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது.
1999-பத்மசிறீ விருது.
2008-பத்மவிபூஷன் விருது.

சச்சின் சச்சின் டெண்டுல்கரின் அரிய புகைப்படம்.


































LIKE MY FACEBOOK PAGE: www.facebook.com/99likes.blogspot

Comments

  1. thanks for share our sachin photos

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி...

      Delete

Post