Google வழங்கும் புத்தம் புதிய வசதி Save to Drive





உலகின் முன்னணி இணையத்தள சேவையினை வழங்கி வரும் கூகுள் நிறுவனமானது தொடர்ச்சியாக பல்வேறு புத்தம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது Save to Drive எனும் புத்தம் புதியதுமான, பயனுள்ளதுமான அம்சம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது Save to Drive எனும் நீட்சியினை குரோம் உலாவியில் நிறுவிக் கொள்வதன் மூலம் நீங்கள் பார்வையிடும் இணையத்தளப்பக்கங்கள், அவற்றிலுள்ள புகைப்படங்கள், HTML5 இற்கு இசைவாக்கம் கொண்ட ஒலி, காணொளிகள் என்பவற்றினை நேரடியாகவே Google Drive இனுள் சேமித்துக்கொள்ள முடியும்.
உதாரணமாக குறித்த நீட்சியை நிறுவிய பின்னர், நீங்கள் பார்வையிடும் இணையப்பக்கத்தில் உள்ள படங்களில் Right Click செய்யுங்கள்.
அப்போது தோன்றும் மெனுவில் காணப்படும் Save Image to Google Drive என்பதை தெரிவு செய்தால் போதும், குறித்த படம் Google Drive இனுள் சேமிக்கப்பட்டு விடும்.


99likes facebook: 

Comments

  1. பயனுள்ள பதிவு நன்றி நண்பா

    ReplyDelete

Post