Team viewer software ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Team viewer software ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க.

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.



மற்றொருவரின் கணினியை அவரின் அனுமதியுடன் இயக்கி செயல்களை செய்வதற்கு Team Viewer எனும் இலவச மென்பொருள் பெரிதும் உதவுகிறது.


 கடல் கடந்து உலகின் எந்த மூலையில் இருக்கும் கணினியின் மொத்த இயக்கத்தையும் இங்கிருந்து கொண்டே நாம் கண்ட்ரோல் செய்ய இந்த சாப்ட்வேர் பயன் படுகிறது.
இந்த சாப்ட்வேர் வரும் முன் பலர் வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் , உறவினர்கள் கம்யூட்டரில் சிறு சிறு பிரச்சனைகள் வரும் போது அதை சரி செய்ய SKYPE இல் ,கூகுல் டாக்கில் தான் சொல்லி பெரும் சிரமத்தில் இயக்குவார்கள்.
டீம் வியூவர் என்பது ஒரு இடத்தில உள்ள கம்ப்யூட்டரை மற்றொரு இடத்திலிருந்து கண்ட்ரோல் செய்ய , கண்காணிக்க , மாற்றங்கள் , பைலை PEER TO PEER டிரான்ஸ்பர் செய்ய பயன் படும் சாப்ட்வேர்.
டீம் வியூவர் உங்கள் மற்றும் உங்கள் நண்பரின் கம்யூட்டரில் நிறுவியுள்ளீர்கள் என்று வைத்து கொள்வோம் ,டீம் வியூவர் நீங்க உபயோகிக்கும் கம்யூட்டருக்கு ஒரு நிரந்தர கணக்கு எண் கொடுக்கும் அதே போல் நண்பரின் கம்யூட்டருக்கும் ஒரு எண் கொடுக்கும். நண்பரின் கம்ப்யூட்டர் உங்கள் கட்டு பாட்டில் வரவேண்டுமெனில் அவரிடம் அவரின் நிரந்த கணக்கு எண்ணை கேட்டு உங்க டீம் விவேரில் கொடுத்தால் ஒரு சில வினாடிகளில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரை பிடித்துவிடும்.

உங்கள் நண்பரின் அனுமதி பெற அந்த கம்யூட்டரை கண்ட்ரோல் செய்ய ஒரு தற்காலிக கடவு எண் கொடுக்கும் அதை உங்கள் டீம் விவேரில் கொடுத்தால் போது உங்கள் நண்பரின் கம்ப்யூட்டர் உங்கள் கணினியின் கட்டு பாட்டுக்குள் வரும்
அதாவது அவர் கம்யூட்டர் திரையில் தெரிவதெல்லாம் உங்கள் கணி பொறியின் திரையில் தெரியும்.இங்கிருந்து நீங்கள் மவ்ஸ் கர்சரை நகர்த்தினால் அங்கும் நகரும் .
இதன் மூலம் இங்கிருந்த படியே அவர்கள் கம்யூட்டரில் உள்ள குறைகளை நீக்கலாம், அவர்கள் பைலை உங்களுடன் சேர் பண்ணி கொள்ளலாம்.
அதே போல் இந்த சாப்ட்வேர் மூலம் உள்ளே நுழைவதில் நிறைய முறைகள் உண்டு ஓவொரு முறையும் தற்காலிக பாஸ்வேட் கொடுக்க செய்யலாம், ஒவ்வருவருக்கும் நிரந்தர பாஸ்வேட் கொடுக்க செய்யலாம், ஒரே ஒரு நம்பிகை கூறியவரின் கம்ப்யூட்டரை மட்டும் எந்த அறிவிப்புமின்றி உங்கள் கம்ப்யூட்டரை கட்டு படுத்த செய்யலாம். 


Team Viewer Download...


Comments

  1. பலமுறை பயன்படுத்துகிறேன்...

    பலருக்கும் உதவும் பகிர்வு...

    நன்றி...

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி.. by admin

    ReplyDelete

Post