Facebook-க்கு addict ஆனவனை குணப்படுத்தவே முடியாது



Facebook-க்கு  addict  ஆனவனை  குணப்படுத்தவே முடியாது.

மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் மாணவர்களின்

எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. 

கல்லூரி செல்லும் மாணவர்களும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்திய காலம் போய் இன்றைக்கு லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியும், பார்வையிட்டும் வருகின்றனர். 

மழை பெய்தால் ஸ்டேட்டஸ், தும்மினால் ஸ்டேட்டஸ் என அப்டேட் செய்து அதற்கு லைக் கேட்டு காத்திருக்கும் காலம் வந்துவிட்டது. 

அதிகம் ‘லைக்' கிடைத்தால் மகிழ்ச்சியும், யாருமே ‘லைக்' போடாவிட்டால் மனஅழுத்தமும் ஏற்படுகிறது இவர்களுக்கு. 

ஆர்வத்தில் தொடங்கிய இந்த பழக்கம் படிப்படியாக இதிலிருந்து மீளவே முடியாத அளவிற்கு வலைத்தளங்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர். 

இதனால் பெற்றோர்களுடனான பேச்சு குறைவதோடு, படிப்பும் பாழாகி விடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.


Comments