Power Point Presentasion நை Video File லாக மாற்றம் செய்ய மென்பொருள் .


மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்(MS Office) தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன்பாடுகள் ஏராளமானவை.


ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர்பாய்ண்ட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வகுப்புகளில், கருத்தருங்குகளில் என எல்லாவற்றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனைப் பயன்படுத்திதான் தங்களுது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேஷன் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.  இவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர்பாய்ன்ட்(Powerpoint application) அல்லது பவர்பாய்ன்ட் வியுவர்(Powerpoint viewer) இருந்தால்தான் பவர்பாய்ண்ட் கோப்புகளை(power point presentation)  காண முடியும். இவற்றையே வீடியோ கோப்புகளாக மாற்றிவிட்டால் உங்கள் வீட்டு டி.வியில் கூட பவர்பாய்ண்ட்டில் உருவாக்கிய கோப்புகளை காண முடியும். அதாவது டிவிடி பிளேயர், CD Player போன்ற பிளேயர்களில் உள்ளிட்டு அவற்றை டிவியில் பார்க்கலாம். பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக(Video files) மாற்ற பவர்பாய்ண்ட்டில் வசதி தரப்படவில்லை. எனவே பவர்பாயிண்ட்டில் வீடியோவாக மாற்றுவது என்பது இயலாத காரியம். இதற்காகவே இந்த மென்பொருள் பயன்படுகிறது. மென்பொருளின் பெயர்

Leawo PowerPoint to Video Free. 

இந்த இலவச மென்பொருள் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும். உங்கள் பவர்பாய்ன்ட் கோப்புகளை 3PG, 3G2, ASF, WMV, ஆகிய பார்மட்களில் வீடியோ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். 


இந்த மென்பொருளைத் தரவிறக்க சுட்டி:Download Leawo PowerPoint to Video Free. 

இந்தமென்பொருளானது பவர்பாய்ண்ட்டின் அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது(Support). PPT, POT, PPTX, PPS போன்ற பவர்பாய்ண்டின் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் இம்மென்பொருள் மூலம் வீடியோவாக மாற்ற முடியும்.

மேலும் பவர்பாய்ண்டில் நாம் உருவாக்கிய அனைத்து அனிமேஷன்களும், வீடியோவாக மாற்றம் செய்தபிறகு அப்படியே வேலை செய்யும் என்பது இம்மென்பொருளின் கூடுதல் சிறப்பு.

என்ன நண்பர்களே... இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற தயாராகிவிட்டீர்களா?... 

உங்கள் பவர்பாய்ண்ட் ஆக்கங்களை இனி உங்கள் வீட்டு  டிவியிலும் போட்டுக் காண்பித்து பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான PowerPoint Presentation நீங்களே உருவாக்கி வீடியோவாக மாற்றி CD பதிவேற்றிக்கொடுங்கள். அவர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

Comments

Post