இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
1. Google Chrome

இணைய உலகில் மிகப்பெரிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் உலவி. இதன் வளர்ச்சி மற்ற பிரவுசர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில இருந்த பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்த உலவி. இந்தியாவில் முதல் இடத்தில இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இப்பொழுது இந்த உலவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய -
Chrome 17.0
2. Firefox
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய -
Firefox 11.0 Beta 73. Windows 8 Consumer Preview
உலகில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் இயங்கு தளங்களில் விண்டோஸ் முக்கியமான ஒன்று பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் மென்பொருளாகும். சமீபத்தில் விண்டோஸ் 7 வெளியிட்டு விற்ப்பனையில் சக்கை போடு போட்டது. இப்பொழுது இதன் அடுத்த வெர்சனாக windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது. கணினி, டேப்லெட், மொபைல் என அனைத்திலும் உபயோகப்படுத்தும் படி இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம். ஆனால் இந்த மென்பொருள் Beta நிலையில் தான் உள்ளது. இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய
Windows 8 Beta இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிந்து கொள்ள
இங்கு செல்லுங்கள்.
4. VLC Media Player