Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவது எப்படி ?
Torrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை Web Server இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.
Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில் μTorrent அல்லதுBittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.
Seeds, Leechers என்றால் என்ன ?
நீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம். நீங்கள் download பண்ணும் File ஐ உங்களைப் போல download பண்ணிக் கொண்டு இருப்பவரை Leechers என அழைக்கின்றோம்
Torrent வழங்கும் சில இணையத்தளங்கள்
- Isohunt.com
- Mininova.com
- btjunkie.org
- ThePirateBay.org
- Torrentz.com
Torrent ஊடாக விரும்பிய File ஐ டவுன்லோட் பண்ணுவது எப்படி?
- முதலில் μTorrent என்ற மென்பொருளை உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.
- பின் மேல் உள்ள Torrent ஐ வழங்கும் எதாவது இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு விரும்பிய Torrent File ஐ download பண்ணிக் கொள்ளவும்
- பின் μTorrent என்ற மென்பொருளை திறந்து அதனுள் இழுத்து விடவும்
- அவ்வளவுதான் அந்த File ஐ download பண்ணி முடிந்ததும் அந்த File ஆனது My Documents இல் Downloads என்ற folder இல் save செய்யப்பட்டு இருக்கும்.
Torrent ஐ download பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
Torrent ஐ download பண்ணும் போது Seeds அதிகமாக உள்ள File ஐ தெரிவு செய்து download பண்ண வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய File ஐ முழுமையாக வேகமாக download பண்ணி முடிக்க முடியும்.
Seeds கூடிய File களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் விரும்பிய பெயரைக் கொண்டு தேடினால் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு விடை கிடைக்கும் இதில் உள்ள S என்பது Seeds ஐயும் L என்பதுLeechers ஐயும் குறிக்கிறது நீங்கள் Seeds கூடியதைக் கண்டு பிடிப்பதற்கு S இன் மேல் Click பண்ணினால் Seeds கூடியது முதலாவதாகவும் Seeds குறைந்தது படிப்படியாக குறைந்து செல்லும் (Descending Order) ஒழுங்கில் அடுக்கப்படும். இதிலிருந்து Seeds கூடியயதைக் கண்டு பிடிக்கலாம்
சில வேளைகளில் மென்பொருட்களை download பண்ணும் போது அந்த மென்பொருள் சில நேரங்களில் Virus களினால் பாதிப்படைத்திருக்கக் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் Torrent இல் மென்பொருள் download பண்ணும் போது அந்த Torrent இனுடன் இருக்கும் அதைப் முன்னதாகவே download பண்ணியவர்களின் Comments ஐ வாசித்தபின் download பண்ணுவது பாதுகாப்பானதாகும்.