உலகின் பிரம்மாண்டமான சமூக இணையத்தளமாகக் கருதப்படும் பேஸ்புக் தளத்தில் 83 மில்லியன் போலியான கணக்குகள்


உலகின் பிரம்மாண்டமான சமூக இணையத்தளமாகக் கருதப்படும் பேஸ்புக் தளத்தில் உள்ள ஒரு பில்லியன் கணக்குகளில் 83 மில்லியன் வரையிலானவை போலியான பெயர்களில் உருவாக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள போலியான கணக்குகள் ஒட்டுமொத்தமான கணக்குகளில் 8.7 வீதமானவை போலியானவை என்பதுடன் 4.8 வீதமானவை ஒரே விதமான கணக்குகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டதனால் ஏற்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர 2.4 வீதமான கணக்குகளில் சொந்த தகவல்களுக்கு பதிலாக வியாபார தகவல்களையும், செல்லப்பிராணிகளின் தகவல்களையும் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 1.5 வீதமானவை ஸ்பாமர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.

Comments

Post