உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

எல்லோருக்கும் எதிர்காலம் பற்றி அறிய ஆசை அதனால் தான் ஜாதகத்தை எடுத்துகொண்டு ஜோதிடர் வாசலை தட்டுகிறோம் . தங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என்று நானறிந்தவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை உங்களின் குழந்தையின் குணத்தினை வேண்டுமானால் ஜோதிடர் சொல்லலாம் . பிறக்க போகும் குழந்தை ஆனா பெண்ணா வைத்தியர் சொல்லலாம் இதோ இந்த இணையம் தருகிறது உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் முக தோற்றத்தை .


இதற்கு உங்களின் புகைப்படமும் உங்கள் மனைவி அல்லது கணவன் புகைப்படமும் அல்லது காதலர்கள் ஆயின் காதலர்கள் இருவரின் புகைப்படங்களை இந்த தளத்தில் கொடுத்து உங்களின் எதிர்கால வாரிசின்  அழகிய தோற்றத்தை காணலாம் .



முதலில் தளத்தில் சென்று உங்களின் படங்களை ஒவ்வொன்றாக UPLOAD  செய்யுங்கள் படத்தின் முகத்தினை மட்டும் தளத்தில் தெரிவு செய்யுங்கள் .

பின்னர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயரை குறிப்பிட்டு நிறத்தினையும் குறிப்பிட்டுPROCEED  என்பதை கிளிக் செய்தால் போதும் . உங்கள் குழந்தயின் தோற்றத்தை காணலாம்.

 தள முகவரி  இங்கே 

உங்கள் குழந்தையின் தோற்றத்தை கண்டதும் கடுப்பாகி கமெண்ட் பண்ணாதிங்கப்பா.
இது ஒரு வேடிக்கையான தளம்  நண்பர்களே! சில வேளைகளில் சரியாகவும் வரும் முயற்சி செய்து பாருங்களேன்; 

Post